Sunday, April 20, 2014

மீண்டும் புலிகள் பயங்கரவாதத்தை தலை தூக்கும் முயற்சிகள்: இராணுவ அறிவுரை!

 Sunday, April 20, 2014
இலங்கை::மீண்டும் பயங்கரவாதத்தை தலை தூக்கும் முயற்சிகள் ஆரம்பிப்பதற்காக சில குழுக்களும் இங்கு ஊடுருவி இருக்கின்றன. ஆகவே, இங்கு பயங்கரவாதத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு நீங்கள் துணைபோக வேண்டாம். தமிழ் சிங்கள என்ற வேற்றுமை இல்லாமல் நாம் அனைவரும் இங்கு ஒற்றுமையாக வாழ வேண்டும்.

இதற்குரிய நடவடிக்கைகளையே அனைவரும் முன்னெடுக்க வேண்டுமென்று முல்லைத்தீவில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளையும், அவர்கள் குடும்பத்தினரையும் அழைத்து இராணுவத்தினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை அவர்களது குடும்பத்துடன் வருமாறு அழைப்பு விடுத்திருந்த இராணுவத்தினர், பஸ்களில் குடும்பமாக ஏற்றிக் கொண்டு சென்றிருந்தனர்.
மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்குத் தொடுவாய், கொக்குளாய் மற்றும் நெடுங்கேணி உள்ளிட்ட பிரதேசங்களிற்கு நேற்று மாலை சென்ற இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டு அந்தப் பிரதேசங்களில் இருக்கின்ற முன்னாள் போராளிகளைச் சந்தித்திருந்தனர்.

இதன்போது விடுவிக்கப்பட்ட போராளிகள் அனைவரும் தமது குடும்பங்களுடன் பதவியா ஜனகபுரம் என்ற பகுதியிலுள்ள இராணுவத்தினருடைய முகாமை அண்மித்த பிரதேசமொன்றிற்கு வர வேண்டுமென மிரட்டும் வகையில் அழைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிய

வருகின்றது.இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரின் ஏற்பாட்டில் குறித்த
பிரதேசங்களிற்கு இன்று காலை பஸ்கள் அனுப்பி வைனக்கப்பட்டு முன்னாள் போராளிகளும், அவர்களுடைய குடும்பத்தினரும் இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட பராக்கிரமபுர என்ற சிங்கள பிரதேசத்திற்கு ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுவதுடன், கடும் அச்சம் காரணமாக விடுவிக்கப்பட்ட போராளிகளும், அவர்களது குடும்பங்களும் இராணுவம் அழைத்த பிரதேசங்களிற்குச் சென்றிருந்தனர்.
இங்குள்ள மண்டபமொன்றில் முன்னாள் போராளிகளையும், அவர்கள் குடும்பங்களையும் இராணுவ அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது இங்கு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், பயங்கரவாதத்தை தூண்டும் முயற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக சில குழுக்களும் இங்கு ஊடுருவி இருக்கின்றன.

ஆகவே, இத்தகைய குழுக்கள் தொடர்பில் அவதானகமாக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அத்தோடு, இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்கின்றவர்கள் மற்றும் துணை போகின்றவர்கள் அறியத்தர வேண்டும். அதேவேளை, விடுவிக்கப்பட்ட போராளிகள் இத்தகைய பயங்கரவாதச் செயற்பாடுகளிற்கு துணை போக வேண்டாமென்றும் இராணுவத்தினர் கேட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

No comments:

Post a Comment