Thursday, April 03, 2014
இலங்கை::பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.தேசிய இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் காத்திரமான தீர்வுதுத் திட்டமொன்றை எட்ட முடியும் என்பதனை அரசாங்கம் உறுதியாக நம்புகின்றது என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இனத்துவ கடும்போக்குவாதங்கள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.சிங்கள பௌத்த, தமிழ் அல்லது முஸ்லிம் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை தேசிய அடையாளங்களுடன் கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமானது என அவா குறிப்பிட்டுள்ளார்.
தேவையற்ற வெளிநாட்டு தலையீடுகள் கடும்போக்குவாத்தை போசிக்குமே தவிர, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.உலகின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை இல்லாதொழித்த நாடு என்ற வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போதியளவு கால அவகாசம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமது கட்சியான லங்கா சமசமாஜ கட்சி சிறுபான்மையின மக்களின் உரிமைகளுக்காக என்றும் குரல் கொடுத்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment