Thursday, April 17, 2014

நல்லிணக்கம் ஏற்படுத்த இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான தகவல் அமெரிக்காவிற்கு ஏனோ சென்றடையவில்லை: ருவான் வணிகசூரிய!

Thursday, April 17, 2014
இலங்கை::நல்லிணக்கம் என்பதை ஒரே இரவில் ஏற்படுத்திவிட முடியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

நல்லிணக்கம் ஏற்படுத்த இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான தகவல் அமெரிக்காவிற்கு ஏனோ சென்றடையவில்லை என்று தனக்குத் தெரியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் நல்லிணக்க முனைப்புகள் குறித்து அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் வெளியிட்டுள்ள கருத்துக்கு பதில் அளிக்கும் போதே இராணுவ ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின் 12,000 போராளிகள் புனர்வாழ்க்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதில் மூவர் மாத்திரமே மீள போராட்டத்திற்கு தயாரானதாகவும் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை போரில் இந்திய இராணுவம் பங்கெடுத்ததாக வெளியாகியுள்ள தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இராணுவ ஊடகப் பேச்சாளர், அது குறித்து நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால் கருத்து கூற முடியாது என்றார்.
 

No comments:

Post a Comment