Tuesday, April 22, 2014

பா.ஜ. வானவில் கூட்டணியால் தமிழக அரசியல் மாற போகிறது வேலூரில் அத்வானி பேச்சு!

Tuesday, April 22, 2014
வேலூர்::தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜ கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் நேற்று மாலை தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பேசியதாவது:முதன் முதலில் நான் நாடாளுமன்றத்துக்கு சென்ற போது நான் சந்தித்த நபர் சிவாஜிகணேசன். அவரிடம், நான் பார்த்த ஒரே தமிழ் படம் நீங்கள் நடித்த படம்தான் என்று சொன்னேன். 1952ல் நடந்த முதல் தேர்தலில் இருந்து இப்போது நடக்கும் தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தலிலும் நான் பங்கெடுத்தவன் என்ற வரலாற்று பெருமை எனக்கு உள்ளது.
 
இந்த 16வது நாடாளுமன்ற தேர்தலில் பாஜ பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று அனைத்து ஊடகங்களும் ஆரூடம் கூறுகின்றன. மோடி குஜராத்தில் 3 முறை முதல்வராக இருந்து மாநிலத்தை சிறந்த முறையில் ஆட்சி நடத்தி, எல்லா துறைகளிலும் வெற்றி கொடி நாட்டியுள்ளார். அவரது தலைமையில் இந்த தேர்தலை நாம் சந்திக்கிறோம். இந்த முறை பாஜ பெரும் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நல்ல அரசு என்பது தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் முதலில் ஏழ்மையை ஒழிக்க வேண்டும். அறியாமையை நீக்கி எல்லா மக்களுக்கும் கல்வி அறிவை புகட்ட வேண்டும். குறிப்பாக கிராம பெண்கள் அனைவரும் கல்வி அறிவை பெற வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். எல்லா கிராமங்களுக்கும் மின்வசதி கிடைக்க வேண்டும்.
 
இது வாஜ்பாய் ஆட்சியின் போதும், குஜராத்தில் மோடியின் ஆட்சியிலும், மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியிலும் சாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் போட்டி என்றால் திமுக, அதிமுக இடையேதான் இருந்தது. இந்த முறை பாஜ தலைமையிலான கூட்டணி அதை மாற்றியுள்ளது. புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியதற்காக சந்தோஷப்படுகிறேன்.இந்த கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக, வைகோவின் மதிமுக, ராமதாசின் பாமக, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஈஸ்வரனின் கட்சி என உள்ளனர். இந்த வானவில் கூட்டணியால் தமிழகத்தின் அரசியல் மாற போகிறது. ஆட்சியும் மாற போகிறது.

No comments:

Post a Comment