Wednesday, April 16, 2014

அமெரிக்க உளவுத் துறை தகிடுதத்தங்களை வெளியிட்ட கார்டியன், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளுக்கு புலிட்சர் விருது!

Wednesday, April 16, 2014
நியூயார்க்:அமெரிக்க உளவு துறையின் தகிடு தத்தங்களை வெளியிட்ட கார்டியன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளுக்கு புலிட்சர் விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.பத்திரிகை, ஆன்லைன் ஜர்னலிசம், இலக்கியம், இசை கோர்ப்பு ஆகியவற்றில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும்  புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த 1917ம் ஆண்டு ஜோசப் புலிட்சர் என்பவரின் பெயரில் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது.  செய்தித் துறையில் மிகப் பெரிய விருதாக கருதப்படுகிறது. கொலம்பிய பல்கலைக்கழகம் வழங்கும் இந்த விருதுக்கு, அமெரிக்காவின் கார்டியன், வாஷிங்டன்  போஸ்ட் ஆகிய பத்திரிகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏ உலகம் முழுவதும் உள்ள இணையதளங்களுக்குள் ஊடுருவி முக்கிய பிரமுகர்கள் உள்பட பலருடைய அந்த ரங்க விஷயங்களை திரட்டியதாக அதன் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்நோடென் அம்பலப்படுத்தினார். அவரை கைது செய்ய அமெரிக்கா முயன்ற போது  அவர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்தார். ஸ்நோடென் வெளியிட்ட தகவல்கள் மூலமாக உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் தலைவர்கள், ராணுவ தலைமைய கங்கள் ஆகியவற்றை என்எஸ்ஏ வேவு பார்த்தது தெரிய வந்தது. இதில் நட்பு நாடுகளையும் அமெரிக்கா விட்டு வைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும்  வெளியானது. ஆரம்பம் முதலே ஸ்நோடென் வெளியிட்ட தகவல்களை இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிகையும், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் போஸ்ட்  பத்திரிகையும் தொடர்ந்து வெளியிட்டு அமெரிக்காவின் இன்னொரு முகத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டின.

இந்நிலையில் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் புலிட்சர் கமிட்டி, கார்டியன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளை தேர்வு செய்துள்ளது. ஸ்நோடென் வெளியிட்ட தகவல்களை கட்டுரைகளாக வெளியிட்ட கார்டியன் பத்திரிகையாளர்கள் கிளென் கிரீன்வால்ட், ஈவென் மாக் ஆஸ்கில்  ஆகியோருக்கு புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. புலிட்சர் விருதுக்கு  தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் 10 ஆயிரம் டாலர் வழங்கப்படும்.

No comments:

Post a Comment