Friday, April 11, 2014
இலங்கை::புலிகளின் அரசியல் பிரிவே தமிழத் தேசியக் கூட்டமைப்பு. அதனை இலங்கையில் உடனடியாகத் தடை செய்ய வேண்டும். ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், சட்டத்தரணி சுமந்திரன், எழிலனின் மனைவி அனந்தி ஆகியோரைக் கைதுசெய்து, இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். - இப்படி வலியுறுத்தியுள்ளது ஜாதிக ஹெல உறுமய.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்படும் புலி ஆதரவாளர்களையும் உயிருடனோ அல்லது பிணமாகவோ நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் அரசிடம் வலியுறுத்துயுள்ளது ஜாதிக ஹெல உறுமய. அரசின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேல் மாகாண சபை உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க கருத்து தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:- பிரிவினைவாதம் என்ற மரத்தின் பிரதான கிளையை மட்டுமே நாம் வெட்டியுள்ளோம். அதன் ஏனைய பகுதிகள் அப்படியே இருக்கின்றன. அவற்றையும் வெட்டியெறிந்து மரத்தை வேருடன் சாய்க்க வேண்டும். அமெரிக்க நியூயோர்க்கிலிருந்து செயற்படும் உருத்திரகுமாரையும், நோர்வேயிலுள்ள நெடியவனையும், பிரான்ஸிலுள்ள விநாயகத்தையும், லண்டனிலுள்ள சுரேந்திரன், புலிகளின் ஆலோசகராகச் செயற்பட்ட பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம், உலகத் தமிழர் பேரவையின் வண.இம்மானுவேல் அடிகளார் ஆகியோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ இலங்கைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதை நாம் அரசிடம் வலியுறுத்திக் கூறுகிறோம். நந்தகோபன் எனப்படும் நெடியவனின் உதவியாளரை மலேசியாவில் வைத்துக் கைதுசெய்துள்ளோம். இதனூடாக சர்வதேச ரீதியில் செயற்படும் புலிகளின் வலையமைப்புக்கு சிவப்பு சமிக்ஞையைக் காட்டியுள்ளோம். தலைத்தூக்க முயற்சிக்கும் புலிகளின் வலையமைப்பை முற்றாக அழித்தொழிக்க வேண்டும். அதுமட்டுமன்றி, புலிகளின் அரசியல் பிரிவாக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும். அதற்குத் தேவையாயின் சர்வஜன வாக்கெடுப்பொன்றையும் நடத்த வேண்டும் - என்று தெரிவித்தார் அவர். கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பிலவும்

No comments:
Post a Comment