Wednesday, April 2, 2014

நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனனுக்கு இனந்தெரியாதோரால் உயிர் அச்சுறுத்தல்- பொலிஸில் முறைப்பாடு!

 Wednesday, April 02, 2014
இலங்கை::
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலருக்கு இனந்தெரியாதோரால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச செயலராக நீண்டகாலமாக செந்தில் நந்தனன் கடமையாற்றி வருகின்றார். இந்நிலையில், திடீரென இனந்தெரியாதோரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
 
கடந்த சில தினங்களாக தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகின்ற அச்சுறுத்தல் காரணமாக பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment