Wednesday, April 16, 2014

புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு நிதி உதவிகளை வழங்கிய நபர் ஒருவர் கைது!

Wednesday, April 16, 2014
இலங்கை::புலிகளின் புலனாய்வுப் பிரிவிற்கு நிதி உதவிகளை வழங்கிய நபர் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகள் அமைப்பை மீள ஒருங்கிணையச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்கு குறித்த நபர் நிதி உதவிகளை வழங்கியுள்ளார்.
குறித்த நபர் உண்டியல் முறையின் ஊடாக மலேசியாவிலிருந்து 60 லட்ச ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் புலிகளின் நலன்புரிப் பிரிவில் கடமையாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் மலேசியாவில் சில வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவரிடம் இரண்டு கடவுச்சீட்டுக்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் அடிக்கடி மலேசியாவிற்கு பயணம் செய்பவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment