Tuesday, April 15, 2014
ராமேசுவரம்::ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். குறைந்த அளவு மீன்களோடு பல லட்சம் ரூபாய் நஷ்டத்துடன் மீனவர்கள் கரை திரும்பினர்.
ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக்கிழமை காலையில் 84 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.இவர்கள் கச்சத்தீவு,தனுஸ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது அப்பகுதியில் 2 கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அனைத்து படகுகளையும் மீன்பிடிக்க விடாமல் பகல் முழுவதும் விரட்டியுள்ளனர்.மீன்பிடிக்க திணறிய மீனவர்கள்
வலைகளை எடுத்துக்கொண்டு ராமேசுவரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இப்பகுதியில் போதுமான மீனகள் கிடைக்காததால் குறைந்த அளவு மீன்களோடு ஞாயிற்று கிழமை அதிகாலையில் ராமேசுவரம் வந்து சேர்ந்தனர். இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்கவிடாமல் தடுத்ததால் ஒவ்வொரு படகுக்கும் 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment