Thursday, April 03, 2014
இலங்கை::யாழ். வீரசிங்கம் மண்டபத்தினை ஒரு மாத காலத்திற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வியாபார நடவடிக்கைக்கு குத்தகைக்காக கொடுத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியப் பண்பாட்டு பேரவை மற்றும் யாழ். மாவட்ட வர்த்தகர் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சித்திரைப் புத்தாண்டை ஒட்டி யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகள் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தென்னிலங்கை வர்த்தர்கள் யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், யாழ். வீரசிங்கம் மண்டபம் ஒரு மாத காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமை யாழ். வர்த்தகர்களுக்கு பலத்த இழப்பாக அமைந்திருக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைக்கு நியாயம் கோரி உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக நடைபெறும் இப் போராட்டத்தில், வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் வர்த்தகர் சங்கத் தலைவர், தமிழ்த் தேசியப் பண்பாட்டு பேரவைத் தலைவர் நிசாந்தன் உள்ளிட்டோரும், வர்த்தகர்களும் பங்கு கொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment