Saturday, April 12, 2014

ஜெனரல் ரஷாட் மஹ்மூத் யாழ்.தளபதியுடன் சந்திப்பு!

Saturday, April 12, 2014
இலங்கை::பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹ்மூத் யாழ்.பாதுகாப்புப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவை  (ஏப்.10) சந்தித்தார்.
 
இரு நாட்டு இராணுவ உயரதிகாரிகளுக்குமிடையிலான இச் சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், சந்திப்பை நினைவு கூரும் முகமாக நினைவுச் சின்னங்களையும் பரிமாரிக் கொண்டனர்.
 
இவ்விஜயத்தின் போது ஜெனரல் ரஷாட் மஹ்மூத், யாழ் நல்லூர் கந்தசாமி கோவில், பொது நூலகம் மற்றும் ஒல்லாந்தர் கோட்டை என்பவற்றை பார்வையிட்டதன் மூலம் நடப்பு அபிவிருத்தியையும் சான்றுபகின்றார்.

No comments:

Post a Comment