Thursday, April 03, 2014
காரைக்கால்::இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழகம், புதுவையை சேர்ந்த 58 மீனவர்கள் நேற்று காலை காரைக்கால் வந்தனர். அவர்களது 13 படகுகளும் வந்து சேர்ந்தது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததால் இலங்கை சிறையில் உள்ள 98 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து 24 படகுகளுடன் 98 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதில் முதல்கட்டமாக 13 படகுகளுடன் 58 மீனவர்களை நேற்றுமுன்தினம் இலங்கை கடலோர காவல்படை, இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தது. நேற்று காலை 8.30 மணி அளவில் 58 மீனவர்கள், 13 படகுகளுடன் காரைக் கால் வந்தனர். அவர்களை மீன்வள அதிகாரிகள் உணவு, உடை வழங்கினர். இதன் பின்னர், மீனவர்கள் அங்கிருந்து தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். மீதமுள்ள 40 மீனவர்கள், அவர்களது 11 படகுகள் அடுத்தகட்டமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களும் இன்று அல்லது நாளை தமிழகம் திரும்புவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment