Friday, April 25, 2014

தேர்தல் பணி முடிந்து திரும்பிய போது மாவோயிஸ்ட் கண்ணி வெடியில் 5 போலீசார் உள்பட 8 பேர் பலி!

Friday, April 25, 2014 தும்கா::ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் கண்ணிவெடியில் சிக்கி, 5 போலீசார் மற்றும் 3 ஊழியர்கள் பலியானார்கள்.
 
மக்களவைக்கு நாடு முழுவதும் 11 மாநிலங்களில் நேற்று 6வது கட்டமாக வாக்கு பதிவு நடைபெற்றது. ஜார்கண்ட் மாநிலம் தும்கா தொகுதி உள்பட 4 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. இந்த மாவட்டத்தில் உள்ள அஸ்னாஜோர் கிராமத்தில் வாக்கு பதிவு முடிந்து மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் பணி குழுவினர் பஸ்சில் திரும்பி கொண்டிருந்தனர்.
 
பாதுகாப்புக்கு ஜார்கண்ட் போலீசார் 5 பேரும் வந்தனர். அப்போது சாலையோரம் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை வெடிக்க செய்தனர். அதில் பஸ் சிக்கி நொறுங்கியது. இந்த தாக்குதலில் 5 போலீசார், 3 ஊழியர்கள் அதே இடத்தில் உயிர் இழந்தனர். 12 போலீசார் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
 
காயம் அடைந்த வீரர்கள் தும்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை. அண்டை மாநிலமான சட்டீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகளை குறி வைத்து மாவோயிஸ்ட்கள் கடந்த 12ம் தேதி 2 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் சிஆர்பிஎப் வீரர்கள் 4 பேர் உள்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. -

No comments:

Post a Comment