Wednesday, April 02, 2014
இலங்கை::பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவிசெய்யும் அமைப்புக்கள், நபர்கள், நிறுவனங்களைத் தடைசெய்வது தொடர்பான விசேட வர்த்தமானியில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் கைச்சாத்திட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று அல்லது நாளை வெளியாக விருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை::பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவிசெய்யும் அமைப்புக்கள், நபர்கள், நிறுவனங்களைத் தடைசெய்வது தொடர்பான விசேட வர்த்தமானியில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் கைச்சாத்திட்டுள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று அல்லது நாளை வெளியாக விருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373ன் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவிசெய்யும் அமைப்புக்கள், நபர்கள், நிறுவனங்களைத் தடைசெய்வது தொடர்பில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சும், வெளிவிவகார அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்துக்கமைய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திட்டுள்ளார். இதற்கமைய பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும், உதவும் நபர்கள், அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் தடைசெய்யப்படும்.
இந்த சரத்துக்கு அமைய இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்புக்கள் மற்றும் நபர்களின் சொத்துக்கள், பொருளாதார வளங்கள் யாவும் முடக்கப்படும். தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்ட அமைப்புக்கள் அல்லது நபர்களின் பெயர்கள் அப்பட்டியலிலிருந்து நீக்கப்படும் வரை முடக்கப்பட்ட நிதிகள் மற்றும் சொத்துக்களை பரிமாற்றம் செய்வது தடைசெய்யப்படும். இவற்றை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இயங்கும் பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் அமைப்புக்கள், நிறுவனங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
2001ம் ஆண்டு இரட்டைக் கோபுரத் தாக்குதலையடுத்து பயங்கரவாத செயற்பாடுகளைத் தடுப்பது தொடர்பான பிரேரணையொன்றை அமெரிக்கா, ஐ.நா.
பாதுகாப்புச் சபைக்குச் சமர்ப்பித்தது. இந்த சரத்துக்கு அமைய இலங்கையிலும் சில அமைப்புக்கள் தடை செய்யப் பட்டுள்ளன.
பின்வரும் அமைப்புக்கள் தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
1) தமிக்ஷழ விடுதலைப் புலிகள்
2) தமிழர் புனர்வாழ்வு கழகம்
3) தமிழர் ஒருங்கிணைப்பு குழு
4) பிரித்தானிய தமிழர் பேரவை
5) உலகத் தமிழர் இயக்கம்
6) கனேடிய தமிழ் காங்கிரஸ்
7) அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்
8) உலகத் தமிழ் மன்றம்
9) கனேடிய தமிழர்களுக்கான தேசிய பேரவை
10) தேசிய தமிழ் பேரவை
11) தமிழ் இளைஞர் அமைப்பு
12) உலகத் தமிழர் ஒழுங்கமைப்புக் குழு
13) தமிக்ஷழ நாடு கடந்த அரசாங்கம்
14) தமிக்ஷழ மக்கள் கூட்டம்
15) உலகத் தமிழ் நிவாரண நிதியம்
16) தலைமை காரியாலயக் குழு
ஏற்கனவே தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கு மேலதிகமாகத் தடைசெய்யப்படாதிருந்த அமைப்புக்களே தற்பொழுது தடை செய்யப்பட்டிருப்பதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.






No comments:
Post a Comment