Wednesday, April 2, 2014

தமிழகம் முழுவதும் நேற்று 131 பேர் மனு தாக்கல்!


 Wednesday, April 02, 2014
சென்னை::தமிழகம் முழுவதும் நேற்று 131 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 39 மக்களவை தொகுதி மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி ஆகிய 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று  ஒரே நாளில் மனுத்தாக்கல் செய்தனர்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் 24_ம் தேதி நடைபெறுகிறது. இதற் கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 29_ம் தேதி தொடங்கியது.  முதல் நாளான சனிக்கிழமை அன்று மயிலாடுதுறையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மணிசங்கர் அய்யர் உள்பட 63 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த மாதம் 30_ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 31_ந் தேதி தெலுங்கு வருட பிறப்பு காரணமாக அரசு விடுமுறை விடப்பட்டது. 
இதனால் இந்த 7 நாட்களிலும் வேட்பு மனு தாக்கல் இல்லை. இதையடுத்து மீண்டும் நேற்று  முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 
இம்மாதம் 5_ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். ஏப்ரல் 7_ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும்.9_ந் தேதி மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாளாகும். அடுத்த மாதம் 24_ம் தேதி ஒரே நாளில் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 16_ந் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 
இதற்கிடையில் நேற்று ஏப்ரல் முதல் தேதியாக இருந்ததால் வேட்புமனுதாக்கல் சூடு பிடித்தது. நேற்று ஒரே நாளில் 131 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:_
தமிழகத்தில் நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் 131 பேர் நேற்று மனுதாக்கல் செய்தனர். இதோடு ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 3 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் மக்களவைக்கு மொத்தம் 198 பேரும், ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு 3 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். மனுதாக்கல் பற்றி முழு விபரங்களை அறிய சூசூசூ.டீங்டீஷசிடுச்டூஙூ.சிடூ.கிச்சு.டுடூ/ங்ச்கூஙூஹஸகீஹ2014.கீசிஙி என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment