Tuesday, April 22, 2014
மது விற்றால் 6 மாதம் சிறை:
டாஸ்மாக்கடைகளுக்கு, மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், முக்கிய அரசியல் கட்சிகளின், 'பினாமி'களால் நடத்தப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால், அரசியல் கட்சிகள், தேர்தல் பணியாற்றும் தொண்டர்களுக்கு வழங்க, மதுபானங்களை, மொத்தமாக கொள்முதல் செய்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை::தேர்தலையொட்டி, 'டாஸ்மாக்' கடைகளுக்கு, இன்று முதல், மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், நேற்று தமிழகம் முழுவதும், 100 கோடி ரூபாய் அளவுக்கு, மதுபானங்கள் விற்பனையாகின.
டாஸ்மாக் கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன.தேர்தலை ஒட்டி, இன்று முதல், நாளை மறுதினம் வரை, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, நேற்று டாஸ்மாக் கடைகளில், 'குடி'மகன்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 100 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபானங்கள் விற்பனையாகின. டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரு நாள் விடுமுறைக்கு, 100, 120 கோடி ரூபாய்க்கு, சரக்கு விற்பனையாகும். மூன்று நாட்கள் விடுமுறை இருந்தும், விற்பனை, 100 கோடி ரூபாய் என்பது குறைவு தான். இதற்கு, தேர்தல் கமிஷன் கெடுபிடியே காரணம்' என்றார்.
மது விற்றால் 6 மாதம் சிறை:
டாஸ்மாக்கடைகளுக்கு, மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், முக்கிய அரசியல் கட்சிகளின், 'பினாமி'களால் நடத்தப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால், அரசியல் கட்சிகள், தேர்தல் பணியாற்றும் தொண்டர்களுக்கு வழங்க, மதுபானங்களை, மொத்தமாக கொள்முதல் செய்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது:டாஸ்மாக் கடைகளும், 'பார்'களும் மூடப்பட வேண்டும்.நட்சத்திர ஓட்டல்களில் உள்ள 'பார்'களும், மூடப்பட வேண்டும். இதை மீறி கடைகள்திறந்திருந்தால், சம்பந்தப்பட்டவர் மீது, வழக்கு பதிவு செய்யப்படும். இக்குற்றத்திற்கு, ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்படும்.டாஸ்மாக்
கடைகள் மற்றும் 'பார்'கள் திறந்திருந்தால், பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு, தகவல் தெரிவிக்கலாம். அங்கு சோதனை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்

No comments:
Post a Comment