Tuesday, March 11, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு ஒன்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது!

Tuesday, March 11, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு ஒன்று நேற்று  மாலை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி, செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. மற்றும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோரே இந்தச் சந்திப்பில் ஈடுபட்டனர்.
 
 இலங்கைக்கான பிரிட்டிஷ் தூதுவர் ஜோன் ரன்கின்னை கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் அவர்கள் சந்தித்துப் பேசினர். அமெரிக்கத் தூதரகத்தில் துணைத் தூதுவர் மற்றும் அரசியல் விவகார அதிகாரி ஆகியோரோடு அவர்கள் பேச்சு நடத்தினர். தற்போது ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது அமர்வை ஒட்டி, இலங்கைக்கு எதிராக பிரிட்டன் மற்றும் அமெரிக்கா முன்மொழிந்த பிரேரணை தொடர்பாகவே அவர்கள் கலந்துரையாடினர் என்று தெரிவிக்கப்பட்டது -

No comments:

Post a Comment