Friday, March 14, 2014
இலங்கை::இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்ட்டு யாழ். சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த எஞ்சிய 32 மீனவர்களும், அவர்களது 8 படகுகளுடன் இன்று விடுவிக்கப்பட்டனர்.
ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்பாக அவர்கள் இன்று ஆஜர் செய்யப்பட்ட போதே சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டன.
ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் நீதிவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்பாக அவர்கள் இன்று ஆஜர் செய்யப்பட்ட போதே சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டன.
இவர்கள் 32 பேரும் கடந்த கடந்த 3 ஆம் திகதி கைது செய்யபட்டு பின்னர் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற உத்தரவின் கீழ் இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த மீனவர்களின் விடுவிப்புடன் தற்சமயம் இலங்கைச் சிறைகளில் இருந்த அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர்காவற்றுறை, மன்னார் நீதிமன்றங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 172 மீனவர்கள் கடந்த சில நாட்களில் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர்காவற்றுறை, மன்னார் நீதிமன்றங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 172 மீனவர்கள் கடந்த சில நாட்களில் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை ஆரம்பமாகும் கச்சதீவு திருவிழாவுக்கான கூட்டு ஏற்பாடுகளில் இலங்கை - இந்தியக் கடற்படையினர் ஈடுபட்டிருப்பதால், தமிழகத்தில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களையும், இலங்கையில் விடுக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், இந்திய - இலங்கை கடல் எல்லைப் புறத்தில் வைத்து ஒப்படைத்து பரிமாறும் நிகழ்வு தாமதிப்பதாகக் கூறப்படுகின்றது.
பெரும்பாலும் வரும் திஙகள் அல்லது செவ்வாய் இந்த மீனவர்களை அவரவர்களது நாட்டுக் கடற்படையிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேசமயம், இலங்கை - இந்திய மீனவப் பிரதிநிதிகள் இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சு கொழும்பில் எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என்றும் கூறப்பட்டது.

No comments:
Post a Comment