Friday, March 14, 2014

இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையே எதிர்வரும் 25ஆம் திகதி இரண்டாம்கட்டப் பேச்சுக்கு முன் மீனவர் விடுதலை!

Friday, March 14, 2014
சென்னை::இலங்கை - இந்திய மீனவர்களுக்கிடையே எதிர்வரும் 25ஆம் திகதி இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இரு நாடுகளினதும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்வதான உடன்பாடொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் இந்தியா அதிக அக்கறை காட்டி வருகின்றது. இலங்கை சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில், இலங்கை - இந்திய மீனவப் பிரதிநிதிகளுக்கிடையே எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்னர் இரு நாடுகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கனை விடுதலை செய்வதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.



No comments:

Post a Comment