Monday, March 10, 2014

அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டுவரும் இணை-அனுசரணை நாடுகளில் ஒன்றான மொரீஷியஸ் தொடர்பில் இலங்கை அதிருப்தி!

Monday, March 10, 2014
இலங்கை::மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டுவரும் இணை-அனுசரணை நாடுகளில் ஒன்றான மொரீஷியஸ் தொடர்பில் இலங்கை அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், மொன்டநேக்ரோ, மசெடோனியா ஆகிய நாடுகளுடன் மொரீஷியஸும் இணைந்து முன்மொழிந்து கொண்டுவருகின்ற தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயல் என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும் தெரிவித்துள்ளார்.

இது உள்நாட்டு விவகாரத்தில் அத்துமீறி நுழையும் நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார.

இந்தநிலையில் மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் அர்வின் பூலெல் கருத்து தெரிவிக்கையில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல்கொடுக்கும் தங்கள் அரசின் நிலைப்பாடு காரணமாகவே இலங்கை மீதான பிரேரணையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து கொண்டுவருவதாக தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்  நவநீதம் பிள்ளையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவுகளின் படியும் பொதுநலவாய  மாநாட்டின் இறுதி முடிவுகளின் அடிப்படையிலுமே தாம் இந்த பிரேரணைக்கு அனுசரணை வழங்குவதாக  அர்வின் பூலெல் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய சாசனம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சாசனம் ஆகிய ஏற்பாடுகளுடன் முற்று முழுதாக ஆதரவாக செயற்பட  வேண்டும் என்ற தங்களின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொரீஷியஸ் பிரதமர் நவீன் சந்திரா ராம்கூலம் கனேடிய பிரதமருடன் சேர்ந்து இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்தார்

தற்போது விவாத மட்டத்தில் உள்ள இலங்கை மீதான தீர்மானத்தின் முன்வரைவில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்ற போதும், மனித உரிமை விழுமியங்களைப் பாதுகாத்தல் என்ற முக்கிய கடப்பாட்டில் கருத்தொற்றுமை ஏற்படும் என்றும் மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment