இலங்கை::புலிகளுக்கு எதிராக போராடிய படையினருக்கு துரோகம் இழைக்கப்பட மாட்டாது என
அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்
பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அழுத்தங்களுக்கு அடி பணிந்து,
படையினருக்கு துரோகம் இழைக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் குறித்த படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
படையினர் மற்றும் மக்களை பாதுகாப்பதற்காக எந்தவிதமான சவால்களையும் சந்திக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் அல்லது சில நாடுகளின் அழுத்தங்களுக்கு அடி பணியப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். நவனீதம்பிள்ளை பொய்யுரைத்து வருவதாக அமைச்சர் சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:
Post a Comment