Saturday, March 8, 2014

எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார்: பசில் ராஜபக்ஷ!

Saturday, March 08, 2014
இலங்கை::எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் சுதந்திரத்தையும், இறைமையையும் பாதுகாத்துக் கொள்வதற்காக எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிரந்தரமான சமாதானம் நாட்டின் இறைமையாண்மையும், சமாதானத்தையும் ஏற்படுத்த உதவுவதாகத் தெரிவித்துள்ளார். ரத்தினபுரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படக் கூடிய அபாயம் கிடையாது என தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளில் வாழ்ந்து வரும்  புலிகளுக்கு ஆதரவான தரப்பினர் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment