Thursday, March 06, 2014
இலங்கை::யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்படவுள்ள பெட்ரோல் எரிபொருள் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் இதனால் ஏற்படப்போகும் ஆபத்துக்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அமைந்திருந்த இடத்தில் புதிதாக எரிபொருள் நிலையம் அமைப்பதற்கு யாழ். மாநகர சபை அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், இதனால் பெரும் பாதிப்பக்களை எதிர்நோக்க நேரிடுமென அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து இந்த எரிபொருள் நிலையம் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், மாநகர சபையில் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது அங்கு வந்திருந்த அப்பகுதி மக்கள், இந்த நிலையத்தை அமைக்க வேண்டாமெனக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்போது மாநகர சபையின் உறுப்பினர்களும், மக்களின் விருப்பத்திற்கு மாறாக மாநகர சபை செயற்படாதென்றும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த எரிபொருள் நிலையம் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறும் உத்தரவிட்ட மாநகர முதல்வர், மக்களின் கோரிக்கைகளுக்கு அமையவே இந்தச் சபை செயற்படுமென்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment