Thursday, March 6, 2014

இலங்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லை: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Thursday, March 06, 2014
இலங்கை::இலங்கைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லை என அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தாய்நாட்டை மீளக் கட்டியெழுப்புதல், பாதுகாத்தல் மற்றும் வளர்ச்சியடையச் செய்தல் அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சில நாடுகள் இலங்கை மனித உரிமை தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எந்தவொரு பிரஜையாவது உள்நாட்டுப் பிரச்சினைகளை வெளிநாட்டுக்கோ அல்லது வெளிநாட்டுப் பிரச்சினைகளை உள்நாட்டுக்கே எடுத்துச் செல்லவோ கொண்டுவரவோ முயற்சிக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான முனைப்புக்களின் மூலம் வெற்றியாளர்கள் எவரும் இருக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இறைமையுடைய நாடு ஒன்றின் மீது சர்வதேச விசாரணைகள் மூலம் தலையீடு செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறி;ப்பிட்டுள்ளார். சுயாதீனமான நாடு ஒன்றின் மீது சர்வதேச சமூகம் பலவந்தமான முறையில் தலையீடு செய்யக் கூடாது என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment