Friday, March 14, 2014
இலங்கை::வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வர்த்தகத் துறையில் முதலீடு செய்ய கனடா ஆர்வமாக உள்ளதாக இலங்கைக்கான கனடிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த பலர் கனடாவில் குடியுரிமை பெற்று வசிக்கும் நிலையில், அவர்கள் இப்பகுதிகளில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளதாகவும் கனடியத் தூதுவர் கூறியுள்ளார்.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த பலர் கனடாவில் குடியுரிமை பெற்று வசிக்கும் நிலையில், அவர்கள் இப்பகுதிகளில் முதலீடு செய்வதில் ஆர்வமாக உள்ளதாகவும் கனடியத் தூதுவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த அவர், மாவட்ட அரச அதிபர் சு.அருமைநாயகத்தை யாழ். செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இதன்போதே வடக்கில் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து அவர் அதிக ஆர்வம் செலுத்தியதாக அரச அதிபர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கனடா முதலீடு செய்ய முன்வந்துள்ளதை வரவேற்பதாக தூதுவரிடம் தான் தெரிவித்ததாக குறிப்பிட்ட அரச அதிபர், அதற்குரிய ஏற்பாடுகளை செய்துதர முடியுமென கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றம் குறித்து கனடியத் தூதுவர் தன்னிடம் கேட்டறிந்துகொண்டதாக அரச அதிபர் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நிலையில், அது குறித்து வேறு எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment