Saturday, March 15, 2014
இலங்கை::இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் திருமதி செலீ விடின் அவர்கள், 13ம் தேதி வியாழக்கிழமை பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையகத்தில் வைத்து கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா அவர்களை சந்தித்தார். தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் பற்றி அறிந்து கொள்வதே உயர்ஸ்தானிகரின் விஜயத்தின் நோக்கமாக அமைந்திருந்தது.
பாதுகாப்பு நிலைமைகள் பற்றி தெளிவுபடுத்தும்போது கட்டளைத் தளபதி அவர்கள், சிலர் குடாநாட்டில் நிலவும் சமாதானத்தை இல்லாமலாக்க முயற்சிப்பதாக கூறினார். தமிழ் டயஸ்போராவின் சில பிரிவுகள் புலிகளுக்கு மீள் இணைவை மேற்கொள்வதற்காக சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு செயற்படுவதாகவும், அது பற்றி பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தேவையான சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்டவர்களின் வேண்டுகோளுக்கமைய பொது மக்களுக்கு, சிவில் அமைப்புகளுக்கு மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு தேவையான ஒத்தழைப்பை வழங்க இராணுவம் ஆயுத்தமாக இருப்பதாக அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.



No comments:
Post a Comment