Tuesday, March 04, 2014
இலங்கை::மியான்மர்::அரசு முறை பயணமாக மியான்மர் நாட்டுக்கு சென்றுள்ள பாரதப் பிரதமர் மன்மோகன்
சிங் அங்கு நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை
சந்தித்து பேசினார்.
அப்போது இலங்கை தமிழர் நலன்கள், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது இலங்கை தமிழர் நலன்கள், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளின் தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையலான பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
மியன்மாரின் தலைநகரான நேபிடோவில் நடைபெற்றுவரும் வங்காள விரிகுடா
நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம்
வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இடம்பெறுகிறது.
இக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த மியன்மாருக்கு விஜயம்மேற்கொண்டபோதே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
வங்காளம், பூட்டான், இந்தியா, மியான்மர், நேபால், இலங்கை மற்றும்
தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகளே இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
மியன்மாரின் தலைநகரான நேபிடோவில் நடைபெற்றுவரும் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏழு நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த மியன்மார் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது









No comments:
Post a Comment