Monday, March 31, 2014

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத் தொடரின் போது முன்வைக்கப்பட்ட ஐந்து பிரேரணைகளைத் தனித்து எதிர்த்து அமெரிக்கா தோல்வி கண்டுள்ளது!

Monday, March 31, 2014
ஜெனீவா::ஜெனீவாவில் நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத் தொடரின் போது முன்வைக்கப்பட்ட ஐந்து பிரேரணைகளைத் தனித்து எதிர்த்து அமெரிக்கா தோல்வி கண்டுள்ளது.

பலஸ்தீன விவகாரம் தொடர்பான பிரேரணைகளே அவையாகும்:-
 
"ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிரியாவின் கோலன் பிரதேசத்தில் மனித உரிமைகள்" என்ற பிரேரணை 33 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தது. 13 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மட்டுமே எதிர்த்தது.
 
மேலும் -
"பலஸ்தீன மக்களின் சுய நிர்ணய உரிமை"
 
"ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன நிலத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்கள்"
 
"ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன நிலத்தில் மனித உரிமைகள்"
 
"காசா (Gaza) பிணக்கிற்கான சர்வதேச உண்மைகள் கண்டறியும் ஆணைக்குழு"
 
ஆகிய நான்கு பிரேரணைகளும், 46 நாடுகள் ஆதரவாக வாக்களித்து நிறைவேறின. வாக்களிக்கும் தகுதியுடைய 47 நாடுகளில் எந்த நாடும் வாக்களிப்பைத் தவிர்க்கவில்லை. அமெரிக்கா மட்டும் இவற்றை எதிர்த்து வாக்களித்தது.

No comments:

Post a Comment