Monday, March 10, 2014

கடமை நேரத்தில் காவல்துறையினருக்கு ஆயுதம் தரிக்க பணிப்புரை!

Monday, March 10, 2014
இலங்கை::
காவல்துறை அதிகாரிகள் தமது கடமை நேரத்தில் சுழல் துப்பாக்கி அல்லது துப்பாக்கி ஒன்றினை தம்வசம் வைத்திருக்கும்படி கோரப்பட்டுள்ளனர்.

அண்மைக்காலத்தில், கடமையில் ஈடுபட்டுள்ள வேளைகளில் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாத காலப்பகுதியினுள் மட்டும் காவல்துறை அதிகாரிகள்
தாக்கப்பட்ட சம்பவங்கள் 27 இடம்பெற்றுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment