Thursday, March 13, 2014
இலங்கை::வடக்கு மாகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் தங்கியுள்ள மக்கள் வடக்கில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதற்கு ஏற்ற வகையிலான திட்டங்கள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பினார் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் ஷெல்லி வைட்டிங் அம்மையார்.
வடக்கில் முதலீடு செய்வதற்கு ஏற்ற வசதிகள் உள்ளன. வடக்கைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் கனடாவில் தங்கியுள்ளனர். இவர்களே வடக்கில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். போக்குவரத்து வசதிகள் இலகுபடுத்தப்பட்டுள்ள நிலையில் முதலீட்டுக்கு இது நல்ல தருணம். போக்குவரத்து வசதிகளை இன்னும் விஸ்தரிப்புச் செய்து இலகுபடுத்த கனடா உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
வடக்கில் முதலீடு செய்வதற்கு ஏற்ற வசதிகள் உள்ளன. வடக்கைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் கனடாவில் தங்கியுள்ளனர். இவர்களே வடக்கில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். போக்குவரத்து வசதிகள் இலகுபடுத்தப்பட்டுள்ள நிலையில் முதலீட்டுக்கு இது நல்ல தருணம். போக்குவரத்து வசதிகளை இன்னும் விஸ்தரிப்புச் செய்து இலகுபடுத்த கனடா உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் தலைமையிலான மூவர் குழு ஒன்று நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வந்தது. இந்தக் குழுவினர் இன்று யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்த போதே இது குறித்து அம்மையார் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
ஷெல்லி அம்மையாரின் இந்தக் கேள்விக்கு யாழ். அரச அதிபர் பதிலளிக்கையில், இது வரை இந்த விடயம் குறித்து எம்முடன் எவரும் கலந்துரையாடவில்லை. இதனால் இது குறித்து நாம் ஆராயவில்லை. இங்கு முதலீடு செய்ய புலம்பெயர்ந்தோர் சம்மதித்தால் அதற்கான வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து உலக உணவுத் திட்டம் குறித்த விடயம் பேசப்பட்டது. இதன்போது உலக உணவுத் திட்டக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட மாட்டாது. இதில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா என்று ஷெல்லி அம்மையார் அரச அதிபரிடம் கேட்டார். இதற்கு அரச அதிபர் பதில் கூறுகையில், உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள் போதியனவாக இல்லை. இன்னும் எத்தனையோ பாடசாலைகளை இந்தத் திட்டத்தினுள் இணைக்க வேண்டியுள்ளன. பாடசாலைகளில் சமையல் அறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்கள், இடம்பெயர்ந்துள்ளோர் ஆகியோருக்கு வாழ்வாதாரத்துக்கான கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் மீள்குடியமர்வு குறித்து அம்மையார் கேட்டதற்கு, இந்த விடயங்கள் தொடர்பாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது. இது குறித்த கருத்தைக் கூற விரும்பவில்லை என்று அரச அதிபர் பதிலளித்தார். இந்தக் குழு கீரிமலை நகுலேஸ்வரம் ம.வி., வசாவிளான் பொன். பரமானந்தா வித்தியாலயம் ஆகியவற்றுக்குச் சென்று உலக உணவுத் திட்டம் குறித்துக் குறை நிறைகளைக் கேட்டறிந்தது.


No comments:
Post a Comment