Monday, March 10, 2014

இலங்கைத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு- திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு!

Monday, March 10, 2014
சென்னை::திமுக தேர்தல் அறிக்கை, திங்கள் கிழமை மாலை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, திமுக வட்டாரங் களில் கிடைத்த தகவல்கள் வருமாறு:
இலங்கைத் தமிழர்களின் நலவாழ்வுக்கு போராடுவது, இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசைக் கோருவது, இலங்கை கடற்படை தாக்குதலிலிருந்து தமிழக மீனவர்களைக் காக்க மத்திய அரசு மூலம் நிரந்தரத் தீர்வு, கச்சத்தீவை மீட்டு, அங்கு மீன்பிடிக்கும் உரிமை தமிழர்க ளுக்குப் பெறுவது ஆகியவை முக்கியமாக இடம்பெற்றுள்ளன.

மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க சட்டத்திருத்தம் கொண்டு வருதல், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுவிக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை, சிறுபான்மையினருக்கு மத்தியில் இட ஒதுக்கீடு, மதச்சார்பற்ற கொள் கைகளைக் கடைபிடித்தல், மாநிலங் களுக்கு சுயாட்சி ஆகியவை தேர்தல் அறிக்கையில் உள்ளன.
காவிரி நதிநீர் மேலாண் வாரியம் அமைத்தல், முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை, கல்விக் கடன் வாங்கி செலுத்த முடியாமல் இருக்கும் மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை, தனியார் வருமான வரி உச்சவரம்பை ஐந்து லட்சமாக உயர்த்துதல், இதேபோல் நதிநீர் இணைப்புத் திட்டத்தில் முதற்கட்ட மாக தென்மாநில நதிகளை இணைக்கும் திட்டம் போன்ற முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளதாகத் திமுக வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவைத் தொடர்ந்து, இடது சாரிக் கட்சிகளும் திமுக கூட்டணி யில் சேர முன்வராத நிலையில், திமுகவின் வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படு வதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. திமுக தலைவர் கரு ணாநிதி, அறிவாலயத்தில் திங்கள் கிழமை திமுக தேர்தல் அறிக்கை யையும், புதுவை உள்ளிட்ட 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் ஒன் றாக வெளியிடுவார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment