Saturday, March 15, 2014
இலங்கை::வடக்கு கிழக்கில் ஆண்களும் இராணுவத்தில் இணைந்து கொள்ள முடியும் என இராணுவம் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞர்கள் விரும்பினால் வெற்றிடம் ஏற்படும் போது
இராணுவத்தில் இணைந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய தகுதியுடைய வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஆண்கள் படையில் இணைந்த கொள்ள தடையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தில் எந்தவொரு இலங்கைப் பிரஜையும் இணைந்து கொண்டு கடமையாற்ற
முடியும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் தேவையான உடல் தகுதிகளைக் கொண்டிருத்தல் மட்டுமே அவசியமானது
எனவும், எந்தவொரு இனத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொள்ள முடியும் எனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
2009ம் ஆண்டுக்கு முன்னதாக புலிகள் வடக்கு கிழக்கு
இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து கொள்வதனை தடுத்து வந்தனர் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த உத்தரவுகளை நிராகரித்த சில வடக்கு கிழக்கு பிரஜைகள்
இராணுவத்தில் இணைந்து பாரியளவில் தியாகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆண்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதனால் எவரும் விண்ணப்பத்து இணைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆண்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதனால் எவரும் விண்ணப்பத்து இணைந்து கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment