Friday, March 14, 2014

மீனவர்களை விடுவித்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: முதல்வர் ஜெயலலிதா!

Friday, March 14, 2014
சென்னை::ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கயத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க.வேட்பாளர் செல்வகுமார சின்னையனை ஆதரித்து முதல்ஜஅமைச்சர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அப்போது முதல்ஜஅமைச்சர் ஜெயலலிதா, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க தமது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கினார். தமிழக அரசின் தொடர் முயற்சியினால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். இலங்கையில் உள்ள மீனவர்கள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறினார். . 

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட பின்னர்தான் இருநாட்டு மீனவர்கள் பேச்சு நடைபெறும் என்றார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். செல்வக்குமார சின்னையன் ஆகியோரை ஆதரித்து ஷபரஞ்சேர்வழி, நால்ரோடு, காங்கயம்' என்ற இடத்தில் ஆற்றிய எழுச்சிமிகு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட உரைவருமாறு:ஜ

இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும், சிறைபிடிப்புகளுக்கும், தமிழக மீனவர்கள் அடிக்கடி ஆட்படுத்தப்படுகிறார்கள். இவை நிகழும் போதெல்லாம் உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமும், தூதரக நடவடிக்கைகள் மூலமும் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன்.  இதன் மூலம் சிறை பிடிக்கப்பட்டவர்கள் எல்லாம் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  அவர்களது உடமைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையில் எனது உத்தரவின் பேரில் தமிழகஜஇலங்கை மீனவர்கள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை 27.1.2014 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னர் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.  அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று கொழும்புவில் நடைபெறுவதாக இருந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ளும் வகையில், தற்போது இலங்கை சிறையில் உள்ள 177 தமிழக மீனவர்களையும், 44 படகுகளையும் கண்டிப்பாக இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நான் கோரியிருந்தேன். என்னுடைய தொடர் வற்புறுத்தல் மற்றும் நிபந்தனை காரணமாக இலங்கை அரசு 116 மீனவர்களையும், 26 படகுகளையும் நேற்று விடுவித்துள்ளது.

இன்னமும் 61 மீனவர்களும், 18 படகுகளும் விடுவிக்கப்பட  வேண்டும்.  இந்த 61 மீனவர்களையும், 18 படகுகளையும் விடுவித்தால் தான் அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்று மத்திய அரசிடம் தெரிவிக்கும்படி நான் உத்தரவிட்டேன்.  எனது உத்தரவினை அடுத்து தமிழக அரசின் கருத்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, அனைத்து மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கும் வகையில் தமிழக ஜ இலங்கை மீனவர்களுக்கு இடையேயான அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதியை மாற்றி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  எனது தீவிர முயற்சியின் காரணமாக, அனைத்து மீனவர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள்.  அதன் பின்னர், இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும் நாள் முடிவு செய்யப்படும். 

ஆகவே, இன்று(நேற்று)  நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

No comments:

Post a Comment