Monday, March 10, 2014

ஜெனீவாவிலிருந்து அமைச்சர் ஜீ. எல். இலண்டன் பயணம்: அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா கூட்டத் தொடரில் பங்கேற்பு!

Monday, March 10, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது கூட்டத்தொடரில் பங்கெடுப்பதற்காக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா பயண மாகியுள்ளார்.

இதேவேளை, பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு தலைமை தாங்கி கள நிலை மைகளை ஆராய்ந்து வந்த அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று ஜெனீவாவிலிருந்து இலண்டன் சென்றுள்ளார். பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட செயற்பாட்டுக் குழுக் கூட்டம் (விரிணிதிமி) எதிர்வரும் 14ஆம் திகதி இலண்டனில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள் ளும் முகமாகவே அமைச்சர் பீரிஸ் ஜெனீவாவிலிருந்து நேரடியாக இலண்டன் பயணமாகியுள்ளார். 

இலண்டனில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் அமைச்சர் பீரிஸ் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று பொது நலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவை சந்தித்துப் பேசவுள்ளார். அதனைத் தொடர்ந்து எஞ்சிய நாட்களில் மனித உரிமைகள் பேரவையில் இவங்கைக்கெதிராகக் கொண்டுவரவுள்ள பிரேரணையை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவு கோரும் வகையில் அதில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் தூதுவர்களை சந்திப்பதற்கும் அமைச்சர் பீரிஸ் தீர்மானித்துள்ளார்.
 
மார்ச் 21 ஆம் திகதி வரையில் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெவ்வேறு கூட்டத் தொடர்களில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமை தாங்குவார். இதற்கிடையில் எதிர்வரும் 15ஆம் திகதி சபை முதல்வரும் நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா ஜெனீவா நோக்கி பயணமாகவிருப்பது குறிப் பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment