Monday, March 3, 2014

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

Monday, March 03, 2014
புது தில்லி::ராஜீவ்கொலையாளிகள் 7 பேரின் விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் கருனை மனுக்கள் மீது தாமதமாக முடிவெடுத்தால் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த மூன்றுபேருடன் சேர்ந்து 23 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவரும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட், பயாஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இந்த முடிவுக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த 7 பேரின்  விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதன் காரணமாக 7 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததுடன். வழக்கு விசாரணை வரும் 6–ந் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் 7 பேரின்  விடுதலையை எதிர்த்து  குண்டு வெடிப்பில் ராஜீவ்காந்தியுடன் பலியானவர்களின் குடும்பத்தினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கருணை மனு மீதுகுடியரசுத்தலைவர்  முடிவு எடுப்பதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லமுடியாது என்றும் இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று  கூறப்பட்டு இருந்தது.
மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் வரும் 6–ந் தேதி மற்ற மனுக்களுடன் சேர்ந்து இந்த மனு மீதான விசாரணையும் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment