Tuesday, March 4, 2014

புனரமைக்கப்பட்ட 175 வருடங்கள் பழைமை வாய்ந்த கொழும்பு பல்கலைக்கழக கணித பிரிவு கட்டடம் திறந்துவைப்பு!

Tuesday, March 04, 2014
இலங்கை::175 வருடங்கள் பழைமை வாய்ந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணித பிரிவுக்கான கட்டடம் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினது நேரடி வழிகாட்டலில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்காக  (மார்.03) கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ கலந்துகொண்டு புனரமைக்கப்பட்ட கட்டடத்தை திறந்துவைத்தார். மேலும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டபிள்யூ.கே. ஹிரிம்புரேகம பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ அவர்களிடம் மேற்கொண்ட வேண்டு கோலுக்கமைய இராணுவத்தின் 6 ஆவது பொறியல் பிரிவால் இக்கட்டடம் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் 6ஆவது பொறியல் பிரிவின் இச் சேவையைப் பாராட்டுமுகமாக கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டபிள்யூ.கே. ஹிரிம்புரேகம 6ஆவது பொறியல் பிரிவின் தளபதிக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க. கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டபிள்யூ.கே. ஹிரிம்புரேகம ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment