Monday, February 24, 2014

இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை பேரவை குறித்து ஆராய புலிகூட்­ட­மைப்­பினால் உயர் மட்ட குழு நிய­மனம்!

Monday, February 24, 2014
இலங்கை::ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது எதிர்வரும் மார்ச் மாதம் அமெரிக்காவால்
கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்துக்கு மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான பரப்புரைகளில் ஈடுபடுவதற்கென தமிழ்த் தேசியக் புலிகூட்டமைப்பு சிறப்புக் குழு ஒன்றை நியமித்துள்ளது .
இந்தக் குழுவினர் மனித உரிமைகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் இந்தியா உள்ளிட்ட 47 நாடுகளின் பிரதிநிதிகளையும் நேரடியாகச் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபடுவர் '' என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார் .
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது . இதில் கட்சித் தலைவர் இரா . சம்பந்தன் மற்றும் செயலாளர் மாவை . சேனாதிராசா உள்ளிட்ட வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
 ஜெனிவாவில் ஜெனிவாக் குழு
 எதிர்வரும் மார்ச் மாதம் ஜ . நா மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது . இதன்போது இலங்கைக்கு எதிராக , அமெரிக்க அரசினால் கடுமையான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது .
குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் , அங்கத்துவ நாடுகளிடம் ஆதரவு திரட்டுதல் உள்ளிட்ட வேலைகளை முன்னெடுப்பதற்கு சிறப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது .
கூட்டமைப்பின் சார்பில் ஜெனிவா அமர்வுக்குச் செல்பவர்கள் , இந்தியா உள்ளிட்ட அங்கத்துவ நாடுகளுக்குச் சென்று ஆதரவு திரட்டுபவர்கள் யார் யார் என்பதை இந்தச் சிறப்புக் குழு தீர்மானிக்கும் . இந்தக் குழுவினர் அடிக்கடி சந்திப்புக்களை நடத்தி தமது நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வார்கள் .
வடக்கு மாகாணசபைக் குழு
 வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பதாகவே இது தீர்மானிக்கப்பட்ட விடயம் . வடக்கின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகம் தொடர்பில் முதலமைச்சர் உள்ளடங்கலாக குழுவொன்று நியமிப்பதென்றும் அந்தக் குழுவினர் மாதமொரு முறை கலந்துரையாடல்கள் நடத்துவர் என்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது .
இருப்பினும் அந்தக் குழு அமைப்பது இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வருகின்றது . உடனடியாக அந்தக் குழுவை அமைத்து , வடக்கு மாகாண சபையைக் கொண்டு நடத்துவதில் ஏற்படுகின்ற முட்டுக்கட்டைகளை நீக்குவது தொடர்பில் ஆராயப்படும் என்றும் அந்தக் குழு விரைவில் அமைப்பதென்றும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
 மனோவுக்கு ஆதரவு
ஜனநாயக மக்கள் முன்னணிக்கு மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆதரவு வழங்குவதென்றும் நேற்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
வடக்குகிழக்கு மாகாண சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனநாயக மக்கள் முன்னணி ஆதரவு வழங்கியிருந்தது என்றும் அத்துடன் தலைநகரில் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வருவதுடன் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் முற்போக்குடன் செயற்பட்டு வருவதால் அவர்களை ஆதரிப்பதென்று முடிவெடுக்கப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார் .

No comments:

Post a Comment