Monday, February 24, 2014
இலங்கை::முகநூலை நாட்டில் தடை செய்வது தொடர்பாக எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லையென, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் முகநூலை தடைசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முகநூலை தடை செய்வது தொடர்பாக எவ்வித தீர்மானங்களையும் யாரும் மேற்கொள்ளவில்லை. அப்படி தீர்மானம் மேற்கொண்டிருந்தால், அது தொடர்பாக எமக்கு அறிவிக்க வேண்டும். இது சமூக வலைத்தளமாகும். இதனை தடைசெய்தால் மக்களிடையே விசனங்கள் ஏற்படக்கூடும்.
இந்நிலையில், அப்படி தடை செய்வதென்றால் அதற்கு முன்னர் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன. அதில் இறுதி அங்கம்தான் தடை செய்வதென்பது. இப்படியிருக்கையில், ஒரே தரத்தில் அரசாங்கத்தால் தடைசெய்ய முடியுமென நான் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment