Thursday, February 13, 2014
இலங்கை::மட்டக்களப்பு சந்திவெளியில் ஏறாவூர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யக்கோரி மறியல் போராட்டம் இடம்பெற்றது.
புதன் கிழமை மாலை 7மணிக்கு பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டமானது இரவு 9மணிவரை நீடித்திருந்தது. வீதியை மறித்து தடைகள் போடப்பட்டதனால் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டிருந்தது. இதன்போது கலகத்தை தடுக்க இராணுவத்தினரும் பொலிசாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று மேற்படி பிரதேசத்தில் கிறிஸ்தவ பிரிவினைசபையை சேர்ந்தவர்களால் புதிதாக ஓலை மற்றும் தடிகளினால் அமைக்கப்பட்டிருந்த வணக்கஸ்;தலத்தை அகற்றும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு செவிமடுக்காததால் கைகலப்பு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமுற்ற ஒரு சாரார் தேவாலயத்தினை அகற்றியதுடன் இவர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் மதப்போதகர் உட்பட 4பேர் காயமுற்ற நிலையில் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது சந்தேகத்தின் பேரில் 3 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.இவர்களை விடுதலை செய்யக்கோரியே இவ்வார்ப்பாட்டம் புதன் கிழமையன்று மாலை இடம்பெற்றது.
இதன்போது சம்பவ இடத்திற்க்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமண்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர்கள் பொதுமக்கள்,பொலிசார் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து நிலமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதன்போது இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதி மண்றில் ஆஜர்செய்யப்படுவார்கள் என்றும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரமே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொதுமக்களுக்கு பொலிசாரால் விளக்கம் கூறப்பட்டது.

No comments:
Post a Comment