Thursday, February 13, 2014
இலங்கை::போரால் பாதிக்கப்பட்ட மக்களுடைய உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வெளிநாடுகள் உதவ வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நார்வே தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நார்வே நாட்டுத் தூதுவர் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்புத் தொர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தின் துறைசார் நிலைமைகள் தொடர்பாகவும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்திருக்கின்றனர். இதன்போது நிலைமைகள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, இங்கு பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு பல்வேறு தேவைகள் இருக்கின்றன. இதில் குறிப்பாக, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தற்காலிக வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் உட்பட வாழ்வாதார உதவிகள் என்பன வழங்கப்பட வேண்டியிருக்கின்றது.
இத்தகைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினர்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். எனவே, இதற்கு நார்வேயும் உதவ வேண்மெனவும் கோரிக்கை விடுத்திருந்தேன். இத்தகைய நிலைமைகளை அறிந்துள்ளதாகவும், கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிப்பதாகவும் நார்வே தூதுவர் தெரிவித்துள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment