Monday, February 24, 2014
இலங்கை::இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து, அடுத்த மாதம் முதல் வாரத்தில் கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில், மீனவர்களின் பிரச்சினைக்கு புதிய தீர்வு யோசனையொன்றை இலங்கை அரசு முன்வைக்கவுள்ளதாக மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
இலங்கை - இந்திய மீனவர்கள் இருநாட்டு கடற்பரப்புக்குள் தடையின்றி மீன்பிடிக்கக்கூடிய கூட்டுத் தொழில்முறையே இந்த புதிய தீர்வு யோசனையாகும். இந்த யோசனை குறித்து இந்திய அரசுடன் ஆராய தயாராக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்திய மீனவர்களை வேறு ஆழ்கடல் பிராந்தியத்திற்கு அனுப்புவதில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சனைக்கு இந்த கூட்டுத் தொழில்முறை தீர்வாக அமையும். இலங்கை மீனவர்களை பாதிக்காத விதத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து தடையின்றி மீன்பிடித்துச் செல்வதற்கு இதன்மூலம் வழியேற்படும். அத்துடன், இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடித்துவர வாய்ப்பு கிடைக்கும் எனவும் பி.பி.ஸி. சேவையிடம் அமைச்சர் மேலும் கூறினார்.

No comments:
Post a Comment