Monday, February 24, 2014
மண்டபம்::இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட, 35 கிலோ தங்க பிஸ்கட்டுகள்
பிடிபட்ட வழக்கு தொடர்பாக, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என,
கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.
நேற்று முன்தினம்,
இலங்கையிலிருந்து, நாட்டுப்படகு மூலம், 35 கிலோ தங்க பிஸ்கட்டுகளை கடத்த
முயன்ற போது, ராமேஸ்வரத்தை சேர்ந்த இருவர், போலீசாரிடம் பிடிபட்டனர்.
இவர்கள், மதுரையைச் சேர்ந்த, முகைதீன் என்பவர் மூலம், தங்க பிஸ்கட்டுகளை,
ரயிலில் கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது; முகைதீன், தப்பியோடி
விட்டார். இது குறித்து மரைன் கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, நேற்று,
மண்டபத்தில் கூறியதாவது:
பறிமுதல் செய்யப்பட்டதில், 108 தங்க பிஸ்கட்டுகள்
இருந்தன; அவற்றின் மொத்த எடை, 34.520 கிலோ. கடத்தல் தொடர்பாக, தப்பியோடிய,
மதுரையை சேர்ந்த, இரு முக்கிய குற்றவாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளன. பாம்பனில் பிடிபட்ட, 108 தங்க பிஸ்கட்டுகளை, சுங்க
துறையிடம் ஒப்படைக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment