Saturday, February 22, 2014
இலங்கை::வடக்கு மாகாணத்தின் சனத்தொகைப் பரம்பலை பலிகளே மாற்றியமைத்துள்ளனர் என பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் வாழ்ந்து வந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை
புலிகள் பலவந்தமான முறையில் வெளியேற்றியிருந்தனர் என
குறிப்பிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்திலிருந்து ஒரு லட்சம் முஸ்லிம்களும், 20000 சிங்கள மக்களும்
வெளியேற்றப்பட்டிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1990ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 24 மணித்தியாலத்திற்குள் வடக்கு முஸ்லிம்
மக்கள், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் சுமத்தப்பட்டு வரும்
குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தும் முனைப்புக்களில் அமெரிக்கத் தூதரகம்
ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் ஓர் கட்டமாக அண்மையில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வடக்கிற்கு விஜயம்
செய்து தகவல்களை திரட்டியிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment