Thursday, February 13, 2014

நெடுந்தீவில் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்!

Thursday, February 13, 2014
இலங்கை::இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 29 பேரும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
இராமேஸ்வரம் ஜனதா பட்டணம் பகுதியைச் சேர்ந்த 29 மீனவர்கள், ஏழு படகுகளில் நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் நேற்று மாலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
கைதானவர்கள் காங்கேசன்துறை கடற்படைத் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கடற்படையினரால் யாழ். மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மீனவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டதன் பின்னர், அவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இந்நிலையில், எதிர்வரும் 26ம் தேதி வரையில் மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment