Sunday, January 12, 2014

புலிகள் போட்ட குண்டுகளை படையினர் வீசியதாக வீண்பழி:USA பிரதிநிதிகளிடம் போட்டுக் கொடுத்த ஆயர்கள்!

Sunday, January 12, 2014
இலங்கை::முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரால் விமானக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டன” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் உள்ளிட்ட குழுவினரிடம் தான் தெரிவித்ததாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
 
 
படையினரால் பயன்படுத்தப்பட்ட இந்த மூன்று வகையான குண்டுத் தாக்குதல்கள் காரணமாகவே பெரும்பாலான பொது மக்கள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொல்லப்பட்டனர்” என்றும் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.


இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்த இவர், யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் மற்றும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் சிசனும் கலந்துகொண்டார். இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயரினால் மேற்படி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட மன்னார் மறைமாவட்ட ஆயர், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது குண்டுத் தாக்குதல்களால் காயமடைந்த மக்கள் புதுக்குடியிருபபு, புதுமாத்தளன், கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்கான உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அதற்கான அனுமதியினை பாதுகாப்பு தரப்பினர் வழங்கவில்லை” என்றார்.


காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி அதற்கான தீர்வினை விரைவில் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிககை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த ஆயர், யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூறுவதற்கான சுதந்திரம் இங்கு காணப்படுவதில்லை”
ராணுவம் மறுப்பு


மன்னார் ஆயரின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இராணுவப் பேச்சாளர்
பிரிகேடியர் றுவான் வணிகசூரிய, இந்த வகையான குண்டுகள் தாம் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்றார்.


கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) மற்றும் இரசாயன குண்டுகளை பயன்படுத்துவதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இல்லை. விமான குண்டுத்தாக்குதல்களை நடத்தினோம். அதுவும், யு.வி.எப்.பினால் அங்கீகரிக்கப்பட்ட குண்டுகளையே பயங்கரவாதிகளின் சரியான இலக்குகளின் மீதே தாக்குதல்களை நடத்தினோம். இரசாயண குண்டுகளை புலிகளே பயன்படுத்தினர் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment