Sunday, January 12, 2014
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவு குழுவில் தம்மை இணைத்துக்
கொண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வாழ்வின் அன்றாட அவசிய தேவைகளை
முதலில் பூர்த்தி செய்ய வழிகாண வேண்டும். பின்னர் 13 தீர்வினை நோக்கி செல்வதற்கான
பாதையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமீது நம்பிக்கை வைத்து பாராளுமன்ற தெரிவுக்குழுவை
பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென இந்துமத பீடம் கூட்டமைப்பினருடன் வேண்டுகோள்
விடுத்துள்ளது.
இனவாத வெறுப்பூட்டும் உணர்ச்சியான மேடைப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் வாழ்க்கையை ஒருபோதும் சுபீட்சமாக்கப் போவதில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனோ நிலையை மாற்றி அவர்கள் வாழ்க்கையின் மீது நம்பிக்கை துளிர் விடுவதற்கான மனோ சக்தியை உருவாக்குவதற்கு தமிழ் கூட்டமைப்பினரின் அரசியல் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
தமிழ் மக்களின் அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைமையைத் தோற்றுவிப்பது அவர்களது எதிர்கால வாழ்வுக்கு ‘சங்கடமாகவே அமையும். வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடி புரிந்துணர்வு மூலம் வட மாகாண சபையை முன்னெடுப்பதில் காட்டிவரும் ஆர்வம் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை தருகின்றது.
தமிழ் தேசியம் என்ற தேர்தல் தொனிகள் உங்களை இலகுவாக வெல்ல வைக்கும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினை தீரப்போவதில்லை. தமிழ் மக்களின் வாழ்க்கை சிறப்புற தமிழ் மக்கள் தந்த வாக்குகளை பயன்படுத்துங்கள். முரண்படுவதால் எதனையும் சாதிக்க முடியாது. இணக்கத்துடனான சாணக்கிய செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு நன்மையாக அமையும். ஒரு நாட்டின் தலைமைத்துவத்தை மதித்து கலந்துரையாடிய அரசியல் தீர்வை பெறுவதே சிறந்த வழி என இந்து மத பீடம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment