Saturday, January 18, 2014

ஐந்தாவது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இந்தியத் துணைத்தூதுவர் ஆற்றிய உரை: கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

Saturday, January 18, 2014
இலங்கை::யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் ஐந்தாவது தடவையாகவும் பங்காளி நாடு என்ற தனித்துவத்தோடு கலந்துகொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இருநாடுகளிடையிலும் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தலில் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்படும் உயர் முன்னுரிமையை இது குறிக்கிறது. இலங்கையிலுள்ள இந்திய நிறுவனங்களின் பரந்துபட்ட இருப்பினால் இலங்கைப் பொருளாதாரம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது என்பது திண்ணம்.என உரை நிகழ்த்தினர்

ஐந்தாவது தடவையாக நடைபெறும் யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி  நேற்று வெள்ளிக்கிழமை யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, வடமாகாண முதலமைச்சர் அலுவலகம், கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சு, யாழ்ப்பாணம் வர்த்தக தொழிற்துறை மன்றம், இந்திய துணைத்தூதரகம், யாழ்.மாநகர சபை, இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் என்பன இணைந்து இக்கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தன.
 
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்.மாவட்ட கிளையின் இந்திய துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இக்கண்காட்சியில் கலந்துகொண்டனர்.
 
இக்கண்காட்சி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை கண்காட்சி மற்றும் கருத்தரங்கு சேவையின் முகாமைத்துவ பணிப்பாளர் அர்ஜூன் தர்மதாச தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய துணை தூதுவர் மகாலிங்கம், யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

No comments:

Post a Comment