Thursday, January 9, 2014

அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார்!

Thursday, January 09, 2014
இலங்கை::இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
 
யாழிற்கு நேற்றுக் காலை விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், நேற்றிரவு வடக்கு மாகாண முதலமைச்சரைச் சந்தித்து நீண்ட நேரமாக கலந்துரையாடியிருந்தார்.
 
ஆயினும் இச் சந்திப்புத் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதற்கு இரண்டு தரப்பினர்களும் மறுத்துள்ளனர். இந்தச் சந்திப்புகளை முடித்துக்கொண்டு அமெரிக்க குழுவினர் கொழும்பிற்குச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment