Wednesday, January 1, 2014

யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் பகுதியில் கண்ணிவெடியில் சிக்கிய பெண் ஒருவர் தனது காலொன்றை இழந்துள்ளார்!

Wednesday, January 01, 2014
இலங்கை::யாழ். தென்மராட்சிப் எழுதுமட்டுவாள், ஒட்டுவெளி பகுதியில் கண்ணிவெடியில் சிக்கிய பெண் ஒருவர் தனது காலொன்றை இழந்துள்ளார்.
 
சந்திரசேகரம் புஸ்பமலர் (வயது 35) என்ற குடும்பப் பெண்ணே விறகு எடுப்பதற்காக இன்று புதன்கிழமை பிற்பகல் காணியொன்றிற்குள் சென்ற வேளையிலேயே கண்ணிவெடியில் சிக்கியுள்ளார்.
 
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
 

No comments:

Post a Comment