Thursday, January 02, 2014
கடலூர்::தமிழகத்தில் தங்கியுள்ள, இலங்கை அகதிகளுக்கு, 1,655 வீடுகள் கட்டிக் கொடுக்க நிதி ஒதுக்கீடு செய்து, ஓராண்டிற்கு மேலாகியும், இன்னமும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக, இலங்கைத் தமிழர்கள், அகதிகளாக, தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். இவர்கள், 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர். இங்கு, எந்தவித அடிப்படை வசதியுமின்றி, குறுகிய இடத்தில், அகதிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என, மனித உரிமை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
அதை தொடர்ந்து, முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு, தலா, 1.29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 1,655 வீடுகள் கட்ட, கடந்த, 2012ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி, அரசாணை வெளியிடப்
பட்டது. இந்த வீடுகள் கட்டும் பணியை, அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மேற்கொள்ளவும், வீடு கட்டுவதற்கான இடங்களை வருவாய் துறையினரிடம் கேட்டுப்பெற அறிவுறுத்தப்பட்டது.
பட்டது. இந்த வீடுகள் கட்டும் பணியை, அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மேற்கொள்ளவும், வீடு கட்டுவதற்கான இடங்களை வருவாய் துறையினரிடம் கேட்டுப்பெற அறிவுறுத்தப்பட்டது.
இலங்கை அகதிகளுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட்டு, ஓராண்டிற்கு மேலாகியும், இதுவரை எந்த மாவட்டத்திலும், அதற்கான பணி துவங்கப்படவில்லை. இந்நிலையில், ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பிரஜேந்திர நவ்நீத், இலங்கை அகதிகளுக்கான வீடுகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை, பொதுப்பணி துறை விதிகளுக்குட்பட்டு, வரும், 20ம் தேதிக்குள் முடிவு செய்து, ஆறு மாதத்திற்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment